Skip to main content

சுன்னத்தான இல்லறம்!

சுன்னத்தான இல்லறம்!  

(மனைவி ஒரு பொக்கிஷம்!)

(கணவன்- மனைவியருக்கான இரண்டு நாள் பயிலரங்கம்!)

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்!

கணவன் மனைவியருக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதுமை நிறைந்த பயிலரங்கம் ஒன்றை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இனிக்கும் இல்லற வாழ்க்கை!

இல் வாழ்க்கை என்பது கரும்பு போன்றது! மகிழ்ச்சி, அன்பு, அரவணைப்பு, காதல், பரிவு, பாசம், நெருக்கம், தாம்பத்யம் - இவற்றோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது, அர்ப்பணிப்பது, இவைகளால் குடும்பத்தில் அமைதி - இதுவே இனிக்கும் இல்லற வாழ்க்கை! இவ்வாறு இல்லறத்தை இனிமையாக்கிக் கொள்வதற்குத் தேவையான அடிப்படைகளை கணவனும் மனைவியும் அறிந்து கொள்தல் அவசியம்!

சவால்கள் நிறைந்த குடும்ப வாழ்க்கை!


உடலளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் கூட பெண்கள் ஆண்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்! அறிவாற்றலில், உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்  ஆண்களும் பெண்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள்! எனவே இல்லற வாழ்க்கை என்பது பல சவால்கள் நிறைந்தது!

எனினும் - பல கணவன் மனைவியர் தங்களது இல்லறத்தில் பிரச்னைகள் தோன்றி அவை மேலும் சிக்கலாகி விட்டால், அவை தீர்க்கப்படவே முடியாது என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். எனினும் இல்லறச் சிக்கல்கள் எதுவாயினும், அவற்றுக்கு அழகிய தீர்வுகள் இருக்கின்றன!


இப்பயிலரங்கத்தில் அலசப்படும் கருத்தோட்டங்கள் இதோ!

இனிக்கும் இல்லற வாழ்க்கைக்கான இனிய வழி முறைகள்!

இல்லத்தரசன் – இல்லத்தரசி – கடமைகளும் உரிமைகளும்!

இல்லறச் சிக்கல்களுக்கு அழகிய தீர்வுகள்!

மண விலக்கினைத் தவிர்ப்பது எப்படி?

உணர்ச்சிக் கட்டுப்பாட்டின் அவசியம்!

கணவன் மனைவி அழகிய கலந்துரையாடல்!


இப்பயிலரங்கத்தின் சிறப்பம்சங்கள்: 

சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் இது ஒரு புதுமையான பயிலரங்கம்! நவீன ஆய்வுகளின் உதவியோடு,இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அளிக்கப்படும் பயிற்சி இது!

மேலும் விவரங்களுக்கு:

sakeenahmail@gmail.com

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி