Skip to main content

உனக்குள் ஒரு சுரங்கம்! - மூன்று நாள் பயிலரஙகம்!


அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்; அல்லாஹ்வின் திருப்பெயரால்..


இதோ ஒரு புதுமையான மூன்று நாள் பயிலரஙகம்!


உனக்குள் ஒரு சுரங்கம்! 


வடிவமைத்து நடத்துபவர்:

எஸ்.ஏ. மன்சூர் அலி


தன்னை உணர்ந்து கொள்ளவும்,
தனது திறமைகளைப் புரிந்து அவைகளை வளர்த்துக் கொள்ளவும்,
தனது தனி மனித பலவீனங்களை வென்று
வாழ்வில் முன்னேறிச் சென்றிடவும்,
மற்ற மனிதர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டு
சாதனைகளைப் படைத்திடவும்
தனி மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி
வடிவமைக்கப் பட்டது தான் –

உனக்குள் ஒரு சுரங்கம் – மூன்று நாள் பயிலரங்கம்!

பயிலரங்கத்தில் அலசப்படும் கருத்தாக்கங்கள்

வாழ்க்கையின் நோக்கம்
மனித வள மேம்பாடு
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
ஆன்மிகமும் நற்பண்புகளும்
வெற்றிக்குப் புதிய இலக்கணம்
மனித உறவுகள்
தலைமைத்துவம்
கருத்துப் பரிமாற்றம்
குடும்ப வாழ்க்கை
பணியிடங்களில் விவேகம்
இன்னும்.. இன்னும்…


இனிய தமிழில், சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் -இது ஒரு நவீனமான அணுகுமுறை!


சற்றே விளக்கமாக….

  "மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!" 

–  முஹம்மது நபி(சல்) அவர்கள்.

சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத - தங்கம், வெள்ளி போன்ற கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் 'உள்ளாற்றல்கள் - திறமைகள்" - மறைந்து கிடக்கின்றன!

மனிதனுக்கு உள்ளே பொதிந்து கிடக்கின்ற திறமைகள் அனைத்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்து விடுவதில்லை! சுரங்கத்தின் தாதுப் பொருட்களிலிருந்து "தங்கத்தை" வெளியே கொண்டு வந்து தூய்மைப் படுத்தி மெருகேற்றுவது போன்று தான் - மனிதனின் ஆற்றல்களும், திறமைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் – மனித வாழ்வு என்பது நமது உணர்வுகளுடன் உணர்ச்சிகளுடனும் பிண்ணிப் பிணைந்தது; நமது உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளும் உணர்ச்சிகளும் வலிமை மிக்க மனித வளங்கள் ஆகும். அவை ஆக்கவும் வல்லவை. அழிக்கவும் வல்லவை. நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது.

ஆனால் உணர்வுகளுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படும் போது அது உணர்ச்சியாக மாறி விடுகிறது. மனிதன் பல காரணங்களினால் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகின்றான். பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படுகின்றான். எனவே உணர்ச்சிகளால் மனிதன் சூழப்படும்போது - சற்றே அவன் நிதானித்துச் செயல் பட வேண்டியுள்ளது. தனி மனித வெற்றிக்கு இது மிகவும் அவசியம்!

தனி மரம் தோப்பாகாது என்பார்கள். மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதற்கெனவே வடிவமைக்கப்பட்டவன் மனிதன். ஆனால் மற்ற மனிதர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது மனிதர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே விளங்குகிறது.

கணவன்-மனைவியாக, பெற்றோர்-பிள்ளைகளாக, ஆசிரியர்-மாணவர்களாக, தொழில் முனைவோர்- தொழிலாளிகளாக, சமூக வட்டத்தில் நண்பர்களாக – மிகச் சிறப்பான நல்லுறவை உருவாக்கிக் கொள்வதும் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக மிக அவசியம்.

யார் யார் கலந்து கொள்ளலாம்?

பதினைந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் சமூக அக்கரை உடையவர்கள் – அனைவரும் கலந்து கொள்ளலாம். தனி மனித முன்னேற்றம் குறித்து இஸ்லாம் வழங்குவது என்ன என்று அறிய விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி