Skip to main content

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! - பயிலரங்கம்

அளவற்ற கருணையாளன்! நிகரற்ற இரக்கம் உடையோன்! இறைவனின் திருப்பெயரால்! 

நீடூர் எஸ்.ஏ. மன்சூர் அலி 

வடிவமைத்து நடத்தும்

புதுமையானதொரு பயிலரங்கம்! 

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்!

தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல் என்பது நபிமொழி!

மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வியே தொழுகை குறித்துத்தான் என்பதும் நபிமொழியே!

தொழுகை மார்க்கத்தின் ஒரு தூண்! யார் தொழுகைய நிலை நிறுத்துகிறாரோ அவர் மார்க்கத்தை நிலை நிறுத்தியவராவார். யார் தொழுகையை விட்டு விடுகிறாரோ, அவர் மார்க்கத்தைத் தகர்த்தவர் ஆவார் என்பதுவும் நபிமொழி தான்!

தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாத்தில்?


தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்! – இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான்.

தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்?

வாழ்க்கையில் வெற்றி பெற எவையெல்லாம் நமக்குத் தேவையோ அவை அனைத்தையும் தொழுகையுடன் பின்னிப் பிணைத்திருக்கின்றான் வல்லோன் இறைவன்!

சான்றாக – தொழுகை தூய்மையுடன் இணைந்துள்ளது. தூய்மை வெற்றி தருமா தராதா?

காலம் தவறாமையைக் (PUNCTUALITY) கற்றுத் தருகின்றது ஐவேளைத் தொழுகை! நேரத்தைப் பேணுபவர்கள் வெற்றி பெறுவார்களா மாட்டார்களா?

 தொழுகை – நல்லொழுக்கத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நல்லொழுக்கம் வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை – பொறுமையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பொறுமையாளர்கள் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?

இன்னும்… இன்னும்….தொழுகை நமக்குக் கற்றுத்தருபவை ஏராளம்!

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி!

-எனும் எமது பயிலரங்கத்துக்கு வருகை தாருங்கள்! கலந்துரையாடுவோம்! விடை தேடுவோம்! வாழ்வில் வெற்றி பெறுவோம்!

சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் அலசுகின்ற இப்பயிலரங்கம் முற்றிலும் புதுமையானது! நவீனமானது!

மேலும் விபரங்களுக்கு:

sakeenahmail@gmail.com

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி