Skip to main content

தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - - பயிலரங்கம்: 002 - கருத்துகள்

Feedback: Salat Workshop No: 002 

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரியில் 19 - 12 - 2015 அன்று - தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - எனும் எமது பயிலரங்கம் இறையருளால் நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்! 

அதில் கலந்து கொண்ட சில மாணவிகளின் கருத்துகள்:

"இதைப் போன்ற ஒரு பயிலரங்கத்தில் நாங்கள் கலந்து கொண்டது கிடையாது. இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஆர்வமானதாகவும், ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதைப்போல், எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பயிற்சி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும் வகையில் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு அடுத்து தாங்கள் என்ன கூறுவீர்கள் என தெரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் இருந்தோம். மீண்டும் எங்கள் கல்லூரிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்."

"ஒரு மனிதன் தன்னை இதைவிட மிகவும் அழகாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு மிகவும் நன்றி." - – ஒரு மாணவி

இப்பயிலரங்கம் மூலம் தொழுகையுடன் தொடர்புள்ள பல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். அரபி மொழியின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டேன். தொழுகையின் மூலம் அனைத்தையும் பெற முடியும் என்பதையும், தொழுகையினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும், மேலும் பெண்களுக்காக வாழ்க்கையில் வெற்றி பெற நிதானம், பொறுமை ஆகியவை தேவை என்பதையும் கற்றுக்கொண்டோம். – ஒரு மாணவி

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி