Skip to main content

கல்லூரி மாணவ மாணவியருக்காக - ஒரு புதுமையான பயிலரங்கம்!

இறைவனின் திருப்பெயரால்..

இதோ ஒரு புதுமையான மூன்று நாள் பயிலரஙகம்!

உனக்குள் ஒரு சுரங்கம்!


வடிவமைத்து நடத்துபவர்:

நீடூர் எஸ்.ஏ. மன்சூர் அலி

(மாணவர் நல ஆலோசகர், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்)

மனித வள மேம்பாட்டுப் பயிற்சியில் புதிய முயற்சி ஒன்றை அறிமுகப் படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்! 

இப்பயிலரங்கத்தின் சிறப்பு அம்சங்கள் இதோ!


1 மனித வள மேம்பாடு (HUMAN RESOURCE DEVELOPMENT):

ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற ஆற்றல்களையும், திறமைகளையும் (hidden talents) வளர்த்தெடுக்க உதவும் பயிற்சியே மனித வள மேம்பாட்டுப் பயிற்சி ஆகும். ஒவ்வொரு தனி மனிதனின் - பல்வேறு விதமான - மனித வளங்கள் குறித்து விரிவாக அலசி, தான் யார் என்பதை மாணவ மாணவியர்க்கு உணர்த்துகின்ற இப்பயிற்சி, எமது பயிலரங்கத்தின் மிக முக்கியமான அம்சம் ஆகும்!

2 உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாள்தல் (EMOTIONAL INTELLIGENCE):

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து இன்றைய நவீன உலகில் – மிக அதிகமாக விவாதிக்கப் படுகிறது. ஒரு நிர்வாகத்தின் பல் வேறு மட்டங்களில் பணியாற்றக் கூடியவர்களுக்கு உணர்ச்சித் திறன் பயிற்சி மிக அவசியம் என்று வலியுறுத்தப் படுகிறது. உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மிகத் திறமையாகக் கையாள்வது எப்படி எனும் பயிற்சி எமது பயிலரங்கத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் ஆகும்.

3 தனி மனித தலைமைத்துவம் (PERSONAL LEADERSHIP):

தலைமைத்துவம் என்பது ஒருவர் தனது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்க வைத்து அவர்களை ஆர்வத்துடன் செயல்பட வைத்திடும் திறன்  என்று சொல்லலாம் (capacity to influence others). தனி மனித தலைமைத்துவம் குறித்த ஒரு வித்தியாசமான பயிற்சியும் இப்பயிலரங்கத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று.

4 திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (PREMARITAL COUNSELING):

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளில் பலர் தங்களின் திருமண வாழ்வு குறித்து குழப்பமான மன நிலையில் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு பின்னர் கைசேதப் படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கின்ற  இளைய தலைமுறையினருக்கு  மிகச் சிறப்பாக வழிகாட்டும் பயிற்சியும் எமது பயிலரங்கத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.

5 தேர்வுகளில் சாதனை செய்! (EXCEL IN EXAMINATIONS):

நம்மில் பல மாணவ மாணவியர்க்கு - படிப்பில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. ஆர்வம் இல்லை. தன்னம்பிக்கை குறைகிறது. நினைவாற்றலில் குறை. நேரத்தைத் திட்டமிட முடியவில்லை. கவனச் சிதைவு, தேர்வு பயம், படபடப்பு, மன அழுத்தம், மனச்சோர்வு, தோல்வி மனப்பான்மை - இவை போன்ற மாணவர்களின் பிரச்னைகளை அலசி, மாணவ மாணவியர் தேர்வுகளை ஆர்வத்துடன் எதிர்கொள்வதற்காக - ஊக்கப்படுத்திடும் (Motivation) பயிற்சியும் எமது பயிலரங்கத்தின் ஒரு சிறப்பம்சமே.

இப்பயிலரங்கம் முற்றிலும் புதுமையானது! நவீனமானது! இனிய தமிழில் சிந்தனையைத் தூண்டும் கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல்களுடன் நடத்தப்படும் இப்பயிலரங்கம் – ஒரு பயனுள்ள அனுபவம்!

மேலும் விபரங்களுக்கு:

sakeenahmail@gmail.com

www.sakeenahblogspot.blogspot.in

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி