Skip to main content

சுன்னத்தான இல்லறம் - பயிற்சி பற்றிய கருத்துகள்

காரைக்கால் IIWF சார்பாக நடை பெற்ற சுன்னத்தான இல்லறம்  - பயிலரங்கத்தில் கலந்து கொண்டோர் கருத்துக்கள்:

அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எஸென்ஸ். உள் மனதில் உள்ள விஷயங்களை அசைபோடச் செய்தீர்கள்; சில விஷயங்கள் எங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. சில விஷயங்கள் என் எதிர்கால் லட்சியம்; 15 வருட என் திருமண வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது. சே! இத்தனை வருடம் வீணடித்து விட்டோமோ என்று வருந்துகிறேன்; நான் யார் என்பதை சில கேள்விகளில் என்னை உணர வைத்தீர்கள். -  ஒரு சகோதரி


இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துவதின் மூலம் குடும்பத்தை  சீராக நடத்த உதவும். எல்லா பெண்களும் இது குறித்து மற்றவரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். அதனால் இது போன்ற நிகழ்ச்சி அவசியம். இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: சொல்வதை உணர்வு பூர்வமாக சொன்னது; சொல்வதோடு நில்லாமல் செயல் படுத்தத் தூண்டிய விதம்;  அல்ஹம்துலில்லாஹ்! நிறைவாக இருந்தது! - ஒரு சகோதரி

இது எனக்கு சுய பரிசோதனை போல் இருந்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: மிக எளிமையாக எங்களிடமிருந்து கேட்டு பதிலளித்தது. - ஒரு சகோதரி

Masha Allah, It is amazing, interesting and extra ordinary. I have gathered more information to make my married life more beautiful. Jazakallah - One sister

இல்லற வாழ்க்கை, கணவன் மனைவி உறவு முறை பற்றி இவ்வளவு விரிவாக யாரும் பேசியது இல்லை; அதை பற்றி பேசிய விதம் நிறைவாக இருந்தது. - ஒரு சகோதரி

இந்த வகுப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. திருமணத்தைப் பற்றியும் இல்லறத்தைப் பற்றியும் பல விஷயங்களை அறிந்து கொண்டோம். மென்மேலும் இத்தகைய வகுப்புகள் நடை பெற வேண்டும் என விரும்புகிறோம். - ஒரு சகோதரி

இந்த பயிற்சி வகுப்பில் எங்களை மனம் விட்டு பேச வைத்தது எங்களுக்கு மிகவும் பிடித்தது. - ஒரு சகோதரி

அல்ஹம்துலில்லாஹ்! பெண் சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக உள்ளது. எப்போதும் சொற்பொழிவுகளுக்குச் செல்வோம், சொல்வதை கேட்போம் என்றில்லாமல் எல்லோரும் சிந்திக்கும் விஷயம் மிகவும் பிடித்திருந்தது. - ஒரு சகோதரி

  

இது மிகவும் உபயோகமான ஒரு நிகழ்ச்சி.  இதன் மூலமாக நான் என் வாழ்க்கையை தீர்மானிக்க எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு சகோதரி

இந்த பயிற்சி எங்களுக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நிறைய பயன் அளித்தது; மாஷா அல்லாஹ். இது போன்ற நிகழ்ச்சியில் எனது கணவர் கல்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன். - ஒரு சகோதரி

இதில் பல நல்ல கருத்துக்கள் நிறைந்திருந்தன.  அல்ஹம்துலில்லாஹ்! இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடக்க வேண்டும் என விரும்புகிறோம்.

The way you explain the topic was very effective and useful. - One sister

திருமண வாழ்க்கையைப் பற்றிய நல்ல விழிப்புணர்வு கிடைத்தது. - ஒரு சகோதரி

அனைத்தும் அருமை! இருவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைத்தது. - ஒரு சகோதரி

நாம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - ஒரு சகோதரி

அல்ஹம்துலில்லாஹ்! மிக மிக பயனுள்ளதாக இருந்தது. எவ்வளவோ அறியாத நபர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் இந்த பயிற்சி வகுப்பு சென்றடைய வேண்டும். இதே போல் இன்னும் நமக்கு தெரியாத பல விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த வகுப்பு மூலம் தெரிந்து கொண்டு பயனடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். - ஒரு சகோதரி

இந்த கால கட்டத்திற்கு அவசியமான ஒரு பயிற்சி. மிகவும் பயனுள்ள பயிற்சி. நான் என்னை புரிந்து கொண்டேன், மாற்றிக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ். - ஒரு சகோதரி

இது போன்ற வகுப்புகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளவை. இதன் மூலம் தன்னைத் தானே சோதித்து ஆராய்ந்து கொள்ள ஒரு வழியாக உள்ளது. - ஒரு சகோதரி

அல்லாஹ்வின் கிருபையால் தங்களின் மூலம் பல தெளிவுகளைப் பெற்றுக் கொண்டேன். என் கணவனை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது இந்த வகுப்பு  - ஒரு சகோதரி

அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் நன்றாக இருந்தது. மனதில் இருந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது. - ஒரு சகோதரி

Comments

Popular posts from this blog

தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.

எதற்காக வந்தோம் இங்கே? - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்"

பயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே? (PURPOSE OF LIFE)

பயிற்சியாளர்: S A மன்சூர் அலி


நீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:

மிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.

மிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி